1
vijay-stills2-450x280.jpg Read more

விஜய்யின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ஹன்சிகா!

புலி படத்தில் விஜய்யின் வேகத்திற்கு இணையாக ஆட முடியாமல் ஹன்சிகா திணறினாராம். சிம்புதேவன் இயக்கி வரும் புலி படத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடித்துக் கொண்டுள்ளனர். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியும் நடிக்கிறார்.

radhika.jpg Read more

இளைய தளபதி படத்தில் ராதிகா சரத்குமார்!

விஜய் தனது 59-வது படத்தை இயக்கும் வாய்ப்பை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லிக்கு வழங்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், ராதிகா சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் ராதிகாவை நேரில் சந்தித்து பேசிய அட்லி, இப்படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். அவரும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், விஜய்யுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.

rambha002-615x343.jpg Read more

பிரபல நடிகை ரம்பாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது

உள்ளைத்தை அள்ளித்தா, அருணாச்சலம், காதலா காதலா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார். இவர்களுக்கு 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர். இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார்.இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ரம்பா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.

Ramba-Laments_2012_8.jpg Read more

கனடாவில் ரம்பாவுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது!

கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார். இவர்களுக்கு 2011-ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர். இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ajith_rokesh001-615x343.jpg Read more

அஜித்திற்காக இரத்தம் கொடுத்தேன்- ’டங்காமாரி’ரோகேஷ்

தற்போதுள்ள இளைஞர்களின் தேசிய கீதம் என்றால் டங்காமாரி மற்றும் டண்டனக்கா பாடல் தான். இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் வடசென்னையை சார்ந்த ரோகேஷ் தான்.இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘தல படம் வருகிறது என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான், கட் அவுட் வைத்து, பால் அபிஷேகம் செய்து கலக்கி விடுவோம்.சமீபத்தில் குட்டிதல பிறந்த அன்று அனைவரும் இரத்தம் கொடுத்தோம்’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் […]

0026-615x343.jpg Read more

எனக்கும் அரசியல் தெரியும்- உதயநிதி அதிரடி பதில்

உதயநிதி நடிப்பில் இந்த வாரம் நண்பேண்டா படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக பல பத்திரிக்கைகளில் உதயநிதி பேட்டி கொடுத்து வருகிறார்.இதில் ஒரு முன்னணி பத்திரிக்கை ஒன்றில் 2016ம் ஆண்டு தேர்தலில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டுள்ளனர். இதற்கு இவர் ‘அரசியல் படித்து வருகிறேன், எனக்கும் கொஞ்சம் அரசியல் தெரியும், ஆனால், தற்போதைக்கு என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டும் தான், அதனால், அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ajith_rajini_angry001-615x343.jpg Read more

கனடாவில் ரஜினிக்கு பிறகு அஜித் செய்த சாதனை

தமிழ் சினிமா படங்கள் தற்போது வெளி நாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் கனடாவில் தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது. இதுவரை ரஜினி நடித்த சிவாஜி, எந்திரன் ஆகிய படங்கள் தான் 8 வாரங்களை கடந்து அங்கு வெற்றிகரமாக ஓடியுள்ளது.இதை தொடந்து தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படமும் 8வது வாரமாக கனடாவில் வெற்றி நடைப்போடுகிறது.

Achamindri-Movie-Stills-1.jpg Read more

காயம் ஏற்பட்டும் படப்பிடிப்பில் கலங்காத சிருஷ்டி டாங்கே!

ராஜபாண்டி இயக்கும் அச்சமின்றி’ இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மீனம்பாக்கம் பின்னி மில்லில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, பரத்ரெட்டி, சேரன் ராஜ், ஜெயகுமார் ஆகிய மூன்று வில்லன்களின் அடியாட்களுடன் மோதி விஜய் வசந்தும் – சிருஷ்டி டாங்கேவும் தப்பிப்பது போன்று ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கும்போது எந்தவித பாதுகாப்பு உபரணங்களும் இன்றி சிருஷ்டி டாங்கே பங்கேற்றதால் கால்களில் பலத்த அடிபட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது

atharva_sixpack002-615x343.jpg Read more

அதர்வா எடுத்த அதிரடி முடிவு?

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதர்வா. இவர் நடிப்பில் பரதேசி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதை தொடர்ந்து இவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வர இரும்பு குதிரை படத்தில் நடித்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால், இனி இது போன்ற கதைகள் வேண்டாம், நகைச்சுவை, காதல் ஆகிய கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

0075-615x343.jpg Read more

சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல்

சூர்யா தற்போது மாஸ் படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாராம்.மேலும், மாஸ் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 14ம் தேதி வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.