1
ILAYARAJA-NEW_0_0_0_01.jpg Read more

ருத்ரமாதேவி படத்தின் பின்னணி இசைக்காக லண்டன் சென்ற இளையராஜா!

ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து வருகிறது. இதற்காக இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். லண்டனில் இளையராஜா இரண்டு வாரங்கள் தங்கி படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை முடித்து விட்டு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

vijaypu.jpg Read more

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய உதவிய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா நகர் ஆர்ச் அருகில் வாடகை தள்ளுவண்டியில் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு சூப் கடை நடத்தி கொண்டு இருந்தார். அவருக்கு விஜய் தன் சொந்த செலவில் டிபன் கடை வண்டி வழங்கினார். கிழக்கு …

Komban-Photos.jpg Read more

நாளை வருகிறான் கொம்பன் – தயாரிப்பாளர் அறிவிப்பு

கொம்பன் படத்துக்கு சாதிய பின்னணியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் நாடார் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று செய்தியாளர்களை பிலிம்சேம்பரில் சந்தித்த ஞானவேல்ராஜா, படத்தை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக, நாளை (புதன் கிழமை) வெளியிடவிருக்கிறோம்,” என்றார். இதன் மூலம் கொம்பன் படம் எதிர்ப்புகளை மீறி வெளியாவது உறுதியாகிவிட்டது.

top_001.jpg Read more

டாப் 10 அணிகள் எவை? ஐசிசி பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் மற்றும் சிறந்த அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள்- டாப் 10 இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் டி வில்லியர்ஸ் 900 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், துடுப்பாட்ட வீரர் ஒருவர் 900 புள்ளிகளை கடப்பது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. […]

srilanka_team_001-615x258.jpg Read more

குழப்பத்தில் தவிக்கும் இலங்கை கிரிக்கெட்: தீர்வு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் பெருகிவிட்டது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கை அணியின் உலகக்கிண்ண தொடர் தோல்விக்கு வீரர்கள் தேர்வில் அரசியல் தலையீடு, பயிற்சியாளர் சரியில்லாதது காரணம் என் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி) தலைவர் ஜயந்தா தர்மதாசாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதற்கிடையில், எஸ்.எல்.சியை தற்காலிக கமிட்டி பொறுப்பேற்று நடத்தும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கை போர்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பெருகி விட்டன. ஏப்ரல் 30ல் நடக்கவுள்ள […]

musthfa_kamal_002-615x308.jpg Read more

சாம்பியன் பட்டத்தை வழங்க விடவில்லை… உண்மையை அம்பலப்படுத்வேன்: மிரட்டும் ஐசிசி தலைவர்

ஐ.சி.சி.யில் நடக்கும் பிரச்சனைகளை அம்பலப்படுத்துவேன் என்று அதன் தலைவர் முஸ்தபா கமால் மிரட்டல் விடுத்துள்ளார். நடந்து முடிந்த உலக்கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு ஐ.சி.சி. சேர்மன் என்.சீனிவாசன் (இந்தியா) உலகக்கிண்ணம் வழங்கியுள்ளார். இந்நிலையில் ஐ.சி.சி.தலைவர் முஸ்தபா கமால் இதுதொடர்பாக அளித்த பேட்டியில், உலகக்கிண்ண போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ஐ.சி.சி. தலைவர் தான் கிண்ணத்தை வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். எனவே நான் தான் சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு கிண்ணத்தை […]

sahit_apridesing_001.jpg Read more

இந்தியாவின் தோல்வி: புன்னகையுடன் மோக்கா பாடலை பாடிய அப்ரிடி (வீடியோ இணைப்பு)

உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வெற்றி கொள்ளாதது குறித்து மோக்கா மோக்கா என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பாகிஸ்தான் வீரர்களை கிண்டல் செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டிருந்தன. மக்கள் மத்தியில் பலத்த பிரபலம் அடைந்த இந்த விளம்பரம் குறித்து பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரியிடம், ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கேள்வி எழுப்பியது. அதாவது, இந்தியாவுடனான தோல்வி, மோக்கா மோக்கா விளம்பரம் குறித்து உங்கள் மனநிலை என்ன என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். […]

daniel_vettori_003-615x345.jpg Read more

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் வெட்டோரி

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, கடந்த 1997ம் ஆண்டு இளம் வீரராக தன் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றிருந்த வெட்டோரி, சிறப்பான முறையில் பந்துவீசி, 9 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் தான் அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கிண்ணப் […]

rafael-nadal-miami-615x461.jpg Read more

மியாமி ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நான்கு முறை இரண்டாமிடம் பிடித்த ரபேல் நடால், மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஞாயிறன்று நடைபெற்ற ஆண்கள் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் பெர்ணாண்டோ வெர்டாஸ்கோவிடம் 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். டென்னிஸ் ஒற்றையர் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நடாலை 34வது இடத்தில் உள்ள வெர்டாஸ்கோ வீழ்த்தினார். இது குறித்து வெர்டாஸ்கோ கருத்து வெளியிடுகையில், நடால் போன்ற சிறந்த […]

australia_india_002-615x345.jpg Read more

அவுஸ்திரேலியாவின் அடுத்த தலைவர் ஸ்மித்: பொண்டிங் ஆலோசனை

அவுஸ்திரேலியா அணியின் அடுத்த அணித்தலைவராக ஸ்டீவன் ஸ்மித்தை நியமிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் ஆலோசனை வழங்கியுள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப்போட்டியுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து மைகேல் கிளார்க் ஓய்வு பெற்றார். இதனால் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கிளார்க் காயத்தால் விளையாட முடியாத போட்டிகளில் ஜார்ஜ் பெய்லி அணித்தலைவராக செயல்பட்டு வந்தார். ஆனால் கிளார்க் விளையாடி உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதராண வீரராக கூட […]