Nitya-Menen-in-Suriya%E2%80%99s-next-300x200.jpg Read more

சூர்யாவுடன் இணையும் நித்யா மேனன்!

‘மாஸ்’ படத்திற்குப் பிறகு சூர்யா ‘24’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கிரண் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். தற்போது நித்யா மேனனும் இப்படக்குழுவினருடன் இணைந்திருக்கிறார். சூர்யா இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். ஒரு சூர்யாவுக்கு ஜோடி சமந்தாவும், மற்றொரு சூர்யாவுக்கு ஜோடி நித்யா மேனன் என்று கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rajini_dinesh002-615x343.jpg Read more

ரஜினி – ரஞ்சித் படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என்ன ?

ரஞ்சித் இயக்கத்தில் மிக விரைவில் ரஜினி நடிக்க போகிறார் என்பது தெரிந்த விஷயம். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்க போகிறது என்கிறது தயாரிப்பு வட்டாரம். ஏற்கனவே பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே, மெட்ராஸ் கலையரசன் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்க, தற்போது புதிதாக அட்டகத்தி தினேஷ் இணைந்துள்ளார். ரஞ்சித்தின் சினிமா வாழ்க்கை அட்டகத்தி தினேஷுடன் தான் தொடங்கியது, அதனாலே அவர் மேல் ரஞ்சித்துக்கு ஒரு மரியாதை, ரஜினி படத்துக்காக இவரின் கதாபாத்திரம் வடிவமைப்பில் தற்போது […]

vinu_chakravarthy001-615x343.jpg Read more

வினுசக்ரவர்த்தி கவலைக்கிடம் – மருத்துவமனையில் அனுமதி

அருணாச்சலம், குரு சிஷ்யன், நாட்டாமை, ஜெமினி போன்ற படங்களில் நடித்தவர் வினுசக்ரவர்த்தி. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார்.அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.தற்போது வினுசக்ரவர்த்தி முழுவதுமாக நினைவை இழந்து கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

vijayakanth002-615x343.jpg Read more

ரியல் ஹீரோவான விஜயகாந்த்

சில வருடங்களுக்கு முன்பு ரஜினி, கமலுக்கே தமிழ் சினிமாவின் கடும் போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். இவர் தன் அரசியல் ஆசையால் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகினார். ஆனால், இவர் எந்த மேடையில் பேசினாலும் அதை கிண்டல் செய்து Meme Create செய்ய ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். இது அவர் மனதை மிகவும் புண்படுத்தியது. அவர் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று கூறியும் அனைவரும் தொடர்ந்து செய்து வந்தனர்.சமீபத்தில் மறைந்த எம்.எஸ்.வி, இப்ராஹிம் ராவுத்தர், அப்துல் கலாம் அவர்களின் […]

sivakarthikeyan_paravai_muniyamma002-615x343.jpg Read more

நீ செய்தால் நானும் செய்வேன்- சிவகார்த்திகேயன் அதிரடி

தமிழ் சினிமாவில் எப்போதும் போட்டி என்று ஒன்று இருந்தால் தான் முன்னேற முடியும். ஆனால், எந்த ஒரு போட்டியும் இல்லாமல் உச்சத்திற்கு வந்தவர் சிவகார்த்திகேயன். ஒரு சிலர் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் எப்போதும் தனுஷை தான் போட்டியாக பார்க்கின்றார் என கூறி வந்தனர். இதை நிரூபிக்கும் பொருட்டு சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பரவை முனியம்மா உடல் நலம் முடியாமல் இருப்பதை அறிந்த தனுஷ் ரூ 5 லட்சம் கொடுத்தார். ஆனால், சிவகார்த்திகேயன் நேராக மருத்துவமனைக்கே சென்று […]

007-615x343.jpg Read more

விஜய் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்- சர்ச்சையை ஏற்படுத்திய பிரபலம்

புலி படம் விஜய்யின் மார்க்கெட்டை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.இதில் பேசிய ஒளிப்பதிவாளர் நட்ராஜ் விஜய்யின் பெயரை குறிப்பிடும் போது சூப்பர் ஸ்டார் என்று கூறினார். உடனே பத்திரிக்கையாளர் தரப்பில் சூப்பர் ஸ்டார் என தெரிந்து தான் கூறினீர்களா, இல்லை தடுமாற்றத்தினால் கூறினீர்களா என கேட்டதற்கு, நான் தெளிவாக தான் குறிப்பிட்டேன், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என பதில் தெரிவித்துள்ளார்.

pak_win_t20_001-615x354.jpg Read more

தொடரும் சோகம்: டி20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இலங்கை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. அகமது ஷேசாத், சோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகிய மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் தலா […]

leave_sl_001-615x393.jpg Read more

இலங்கை அணியில் இடம் இல்லை: நாட்டை விட்டு வெளியேறும் சனாகா வெலேகேதரா

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சனாகா வெலேகேதரா விரைவில் அவுஸ்திரேலியாவில் குடியேற இருக்கிறார். இலங்கை அணியில் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதனால் 34 வயதாகும் வேகப்பந்து வீச்சாளரான வெலேகேதராவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சனாகா வெலேகேதரா அவுஸ்திரேலியாவில் குடியேறி அங்குள்ள கிளப் அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். வெலேகேதரா இலங்கை […]

dhoni_kalam_001-615x461.jpg Read more

நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்: டோனி உருக்கம்

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவரது இதயங்களிலும் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு விளையாட்டு உலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் அப்துல்கலாம் குறித்த நினைவுகளுடன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். டோனி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பின் மூலம் நாட்டின் ஜனாதிபதி […]

gay_attack_002-615x450.jpg Read more

ஓரின சேர்க்கையாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மத வெறியர் (வீடியோ இணைப்பு)

ஜெருசலெமில் ஓரின சேர்க்கையாளர்கள் பேரணியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய மத வெறியரை பொலிசார் கைது செய்தனர். ஜெருசலெம் நாட்டில் ஓரின சேர்க்கையாளர்களின் ஆண்டு பேரணி நடைபெற்றது. இதில் 5000க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக வானவில் வண்ண கொடியை கையில் ஏந்தியபடி கலந்துகொண்டனர். இந்நிலையில் திடீரென கூட்டத்தில் புகுந்த ஒரு மனிதர் கையில் இருந்த கத்தியால் பேரணியில் கலந்துகொண்டவர்களை குத்தத்தொடங்கினர். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் பொலிசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த […]