1
suseenthiran-ropes-in-another-hero-for-nerukku-ner.jpg Read more

சுசீந்திரன்-ரேணுகா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை!

இன்று காலை 9.23 மணியளவில் ஈரோடு அருகே உள்ள கொடுமுடியில் சுசீந்திரன்-ரேணுகா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது முதல் படமான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை சுசீந்திரன் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த அழகர்சாமியின் குதிரை படத்துக்கு சிறந்த மனமகிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

thiflady_story_002-615x413.jpg Read more

திருடினேன் திருடினேன்….வெட்கப்படவில்லை: திருட்டு ராணி சொல்லும் கதை (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெண்மணி ஒருவர் கடுமையாக திருடி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கிம் பெர்ரி என்ற பெண்மணி தனது வாழ்க்கை கதையை ஊடகங்களில் தெரிவித்ததன் மூலம், தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, எனக்கு 9 வயது இருக்கும்போது காலை தூங்கி எழுந்து மாடிப்படியில் இறங்கி வந்தேன். கீழே என் அம்மா கையில் ஒரு முட்டையை வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டதற்கு நம் வீட்டில் சமைப்பதற்கு இருந்த கடைசி […]

Uttama-Villian-Audio-Launch-Stills-26.jpg Read more

நான் உருவாக காரணம் பாலச்சந்தர்: கமலஹாசன் பேச்சு

பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்றவேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன். பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை என்றார்.

disney_ghost_002-615x402.jpg Read more

ஜாலியாக ஓடிப்பிடித்து விளையாடிய பேய்! இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

அமெரிக்காவில் உள்ள பூங்காவில் பேய் ஒன்று ஜாலியாக ஓடி விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. டிஸ்னிலேண்ட் என்ற பொழுதுபோக்கு பூங்காவில் பேய் ஒன்று ஓடியாடி விளையாண்டுள்ளது. இந்த காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான இந்த வீடியோ, கடந்த 2009ம் ஆண்டு இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவை நபர் ஒருவர் மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோவை பார்த்து வரும் நபர்கள், அந்த பூங்காவில் என்ன தான் நடக்கிறது என்று […]

thamarai881.jpg Read more

நான்காவது நாளாக தொடரும் கவிஞர் தாமரை அவர்களின் தர்ணா போராட்டம்!

கணவரை சேர்த்து வைக்க கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை அவர்கள்.. நான்காவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்கிறார்.. நேற்று முதல் தனது போராட்டத்தை திரு.தியாகு அவர்களின் வேளச்சேரி வீட்டு முன்பு தொடர்கிறார்.. சில மாணவர் அமைப்புகள் இன்று மாலை தன்னை சந்தித்து ஆதரவு தர இருப்பதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

uv002-615x343.jpg Read more

உத்தம வில்லன் இசை வெளியீட்டு விழாவில் கமல் செய்த புதிய முயற்சி

கமல்ஹாசன் எப்போதும் வித்தியாசத்தை தேடியே ஓடுபவர். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.இதில் கமல் ஆடியோவை தன் செல்போன் மூலம் உலகமெங்கும் வெளியிட்டார். மேலும், ஸ்ருதி விழாவிற்கு வராமலேயே ட்ரைலரை வெளியிட்டார்.அது எப்படி என்றால், ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம் இங்கிருந்து, மும்பையில் உள்ள ஸ்ருதிஹாசன், ட்ரைலரை பெற்று கொண்டார்.

anegan_ya_kk001-615x343.jpg Read more

அனேகன், காக்கிசட்டை, என்னை அறிந்தால் வசூல்-முழு விவரம்

பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பிடித்த நடிகர்களின் படங்களாக வெளிவந்துள்ளது. தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த காக்கிசட்டை 3 நாட்களில் ரூ 1.51 கோடி, அனேகன் மூன்று வார முடிவில் ரூ 3.98 கோடி, 4 வார முடிவில் என்னை அறிந்தால் 5.92 கோடி வசூல் செய்துள்ளது.

uv001-615x343.jpg Read more

ரஜினி எப்படியும் முன்னேறியிருப்பார், ஆனால் நான்? கமல் உருக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல் ‘ரஜினி அவர்கள் கே.பி கண்ணீல் படவில்லை என்றாலும், முரட்டுக்களை படத்தின் மூலம் நன்றாக வந்திருப்பார்.ஆனால், நானெல்லாம், கே,பி இல்லை என்றால், இந்த உயரத்தை அடைந்து இருக்க மாட்டேன்’ என்று உருக்கமாக கூறினார்.

ajith_vijay001-615x343.jpg Read more

அஜித்திற்கு வாழ்த்து கூறிய விஜய் ரசிகர்கள்

தல ரசிகர்கள் இன்று உச்சக்கட்ட சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இன்று அதிகாலை 4.30 மணிக்கு அஜித்-ஷாலினி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருந்து வருகின்றனர்.இது மட்டுமில்லாமல் பல விஜய் ரசிகர்கள் தங்களை வாழ்த்துக்களை பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ajith_shalini002-615x343.jpg Read more

அஜீத், ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது

அஜீத், ஷாலினி இருவரும் காதலித்து ஏப்ரல் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு அன்பின் அடையாளமாக அனௌஷ்கா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷாலினி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இன்று காலை ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.